அணிவகுப்பு இன்றி ராணுவ தின கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வழக்கமான அணிவகுப்பு இல்லாமலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) ராணுவ தினம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ராணுவ தினத்தன்றும் ராணுவத்தினரின் அணிவகுப்புதான் "ஹைலைட்"டாக இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு எல்லையில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ராணுவத்தினர் அனைவரும் அப்பகுதிகளில்குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ராணுவ தின அணிவகுப்பு இன்று டெல்லியில் நடைபெறவில்லை. ஆனால் முப்படைத் தளபதிகளானஜெனரல் எஸ். பத்மநாபன் (ராணுவம்), எஸ். கிருஷ்ணமூர்த்தி (விமானப்படை) மற்றும் அட்மிரல் மத்வேந்திர சிங்(கடற்படை) ஆகியோர் "அமர் பவான் ஜோதி"யில் மலர் வளையம் வைத்து ராணுவ தினத்தைக் கொண்டாடினர்.
முப்படைகளின் முதன்மைத் தளபதியும் ஜனாதிபதியுமான கே.ஆர். நாராயணன், துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் ராணுவ தின வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications