பிப்ரவரி 1ல் பாஜகவுடன் இணைகிறது எம்.ஜி.ஆர். அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு தன் கட்சியை கலைத்து விட்டு வரும் பிப்ரவரி 1ம் தேதிடெல்லியில் பிரதமர் வாஜ்பாய் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.

எம்.ஜி.ஆர். மீது உள்ள விசுவாசத்தால் அதிமுகவில் இணைந்து, அவரது அமைச்சரவையில் வீட்டு வசதித்துறைஅமைச்சராக பதவி வகித்த திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணியில் அவருக்குபக்கபலமாக இருந்தார்.

பின்னர் ஜெயலலிதாவோடு ஏற்பட்ட கருத்து மோதலால், அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து 1996ல்எம்.ஜி.ஆர்.அதிமுக என்ற புதிய கட்சியைத் துவக்கினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுக்கோட்டைதொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

இந்நிலையில் பாஜகவுடன் இணக்கமான உறவை திருநாவுக்கரசு படிப்படியாக ஏற்படுத்திக் கொண்டார். கடந்த மேமாத சட்டசபைத் தேர்தலில் இவரது கட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து சீட் வழங்கப்படாததால் திமுகவுடன்அதிருப்தி அடைந்த இவர் பாஜகவில் இணைய முடிவு செய்தார்.

பிரதமர் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானியைத் தொடர்பு கொண்டு கட்சி இணைப்புக்கான நாள்மற்றும் நேரம் ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இவரது வேண்டுகோளை ஏற்று வாஜ்பாய் பிப்ரவரி 1ம் தேதிநேரம் ஒதுக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன் கட்சியைக் கலைத்துவிட்டு வரும் பிப்ரவரி 1ம் தேதி முக்கிய நிர்வாகிகளுடன்டெல்லியில் வாஜ்பாய் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் திருநாவுக்கரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+