இந்தியா-பாக். இடையே அணு ஆயுதப் போர் வராது: அமெரிக்கா நம்பிக்கை
வாஷிங்டன்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் வராது என்று அமெரிக்க வெளியுறவுத் துறைஅமைச்சர் காலின் பாவெல் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றம் தாக்கப்பட்டதிலிருந்தே காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகியஎல்லைப் பகுதிகளில் இந்தியா தன் ராணுவத்தினரைக் குவிக்க ஆரம்பித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவமும் அப்பகுதிகளில் குவிய ஆரம்பித்தது. அடிக்கடி இரு தரப்பினருக்கும்இடையே துப்பாக்கிச் சண்டையும் ஷெல் தாக்குதல்களும் கூட நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முற்றிலுமாகக் குறைத்துக் கொள்ளாத வரைஎல்லைப் பகுதிகளிலிருந்து இந்திய ராணுவம் விலகாது என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் நேற்று (திங்கள்கிழமை) கூறினார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் தொலைக்காட்சி உரைக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும்வரவேற்பு அளித்திருந்தாலும் கூட, தான் சொன்னதையெல்லாம் முதலில் பாகிஸ்தான் செய்யட்டும் என்று இந்தியாஉறுதியாகக் கூறிவிட்டது.
இந்நிலையில் பாவெல் தன்னுடைய தெற்காசியப் பயணத்தைத் துவக்கியுள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்இடையே தற்போது நிலவி வரும் பதற்றத்தைத் தணிப்பதற்காகவே அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
முதற்கட்டமாக பாவெல் இன்று பாகிஸ்தான் செல்கிறார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தங்கள் படைகளை எல்லைப் பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்ளவேண்டும் என்று இஸ்லாமாபாத்துக்குக் கிளம்பும் முன் பாவெல் நிருபர்களிடம் கூறினார்.
மேலும் இந்த இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நிச்சயம் வராது என்றும் பாவெல் உறுதியுடன்கூறினார்.
மதத் தீவிரவாதிகளை முஷாரப் நிச்சயம் ஒழித்துக் கட்டுவார் என்றும் பாவெல் நம்பிக்கை தெரிவித்தார்.
பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு ஆப்கானிஸ்தான் செல்லும் பாவெல், வரும் 18ம் தேதி இந்தியாவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதத் துவக்கத்தில் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அமைதித் தூதராய்வந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீட்டை இந்தியா எப்போதும் விரும்பாது என்று இந்தியா பலமுறைவலியுறுத்தியுள்ளதும், இப்பிரச்சனையில் தலையிட மாட்டோம் என்று ஐ.நா. பாதுகாப்புக் குழு அறிவித்துள்ளதும்குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications