3வது அணிக்குத் தலைமையேற்க ரஜினிக்கு சோ அழைப்பு
சென்னை:
தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ, நடிகர் ரஜினிகாந்த் 3வது அணிக்குத் தலைமையேற்கவேண்டும் என்று "துக்ளக்" ஆசிரியர் சோ கூறியுள்ளார்.
சென்னை மியூசிக் அகாடமியில் "துக்ளக்" பத்திரிக்கையின் ஆண்டு விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது.இந்த விழாவில் சோ, ரஜினிகாந்த், பாஜக பொதுச் செயலாளர் இல.கணேசன், இந்து மன்னணித் தலைவர்ராம.கோபாலன் பங்கேற்றனர்.
விழாவில் சோ பேசியதாவது:
ஜெயலலிதா மீது நானே நானே ஊழல் புகார் கூறியிருந்தேன். அதற்காக கடந்த 96ம் ஆண்டு நடந்த சட்டசபைத்தேர்தலில் அவரைத் தோற்கடிக்கவும் பாடுபட்டேன். இப்போது டான்சி உள்பட 5 வழக்குகளில் அவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.
அதனாலேயே அவர் நிரபராதி என்று கூற முடியாது. அவர் ஊழல் செய்ததால்தான் மக்கள் 1996ம் ஆண்டுதேர்தலில் அதிமுகவுக்கு தோல்வியைப் பரிசளித்தனர். ஜெயலலிதாவுக்கு கோபத்தை அடக்கத் தெரியாது. அதுஅவருடைய சுபாவம்.
கடந்த 2001 தேர்தலின்போது கூட்டணியில் இருந்த கட்சிகளையெல்லாம், என்னால் தான் நீங்கள் ஜெயித்தீர்கள்,உங்களால் எனக்கு பயனில்லை என்று உதறித் தள்ளிவிட்டார். அந்த சட்டசபைத் தேர்தலின் பேது தமாகா,காங்கிரஸ் எல்லாம் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்று நான் கூட பாடுபட்டேன்.
வரும் இடைத் தேர்தலுக்கு தமாகா, காங்கிரஸ் இன்னும் சில கட்சிகள் சேர்ந்து 3வது அணி அமைக்கப் போவதாகபேசப்படுகிறது. எந்த அணியானாலும் அதற்கு தலைவராக நல்ல பர்சனாலிட்டி உடையவர் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் தான் அந்த அணி வெற்றி பெறும்
அந்த பர்சனாலிட்டி ரஜினிக்கு இருக்கிறது. கடவுள் ஒரு சிலருக்குத்தான் அப்படி தலையெழுத்தை எழுதுகிறார். இதுவரை அவர் அரசியலுக்கு வருவதாக சொல்லவில்லை. அவர் வர வேண்டும் என்று நான் சொல்கிறேன்.
இப்படி சொன்னதும் கை தட்டுகிறீர்கள். மக்களுடைய இந்த ஆர்வத்தை ரஜினி நேரில் தெரிந்து கொள்ள வேண்டும்என்பதற்காகத்தான் அவரை வைத்துக் கொண்டு இந்த விஷயத்தை பேசுகிறேன்.
நல்லவர்களை நாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரஜினி பொது காசில் ஒரு பாைசா தொட மாட்டார்என்பதை நான் சத்தியம் பண்ணி சொல்கிறேன். இந்த மாதிரி ஆள்தான் மூன்றாவது அணிக்கு தலைமையேற்கவேண்டும்.
அப்படி நடந்தால் அமோக வெற்றி பெறும். நல்ல காரியங்களை நாட்டுக்கு செய்ய முடியும் மற்ற மாநிலங்களுக்குஎடுத்துக்காட்ட திகழ முடியும் என்று சோ கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications