புலிகள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது: ஜெ. நம்பிக்கை
சென்னை:
இந்தியாவில் பேச்சு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மத்திய அரசுஏற்காது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். மத்திய அரசும் பயங்கரவாதத்தைஒடுக்கப் பாடுபடுகிறது.
எனவே விடுதலைப்புலிகள் கோரிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக ஏற்காது.
இதனால் மத்திய அரசை அதிமுக அரசு எதிர்க்கிறது என்று கருதக் கூடாது. சம்பந்தப்பட்ட பிரச்சனைக்குத் தகுந்தபடிமத்திய அரசை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்கிறது தமிழக அரசு.
மத்திய அரசு எடுக்கும் முடிவு தமிழகத்தைப் பாதிக்கும் என்று தெரிந்தால் மட்டுமே நாங்கள் எதிர்ப்போம் என்றுஜெயலலிதா கூறினார்.
விடுதலைப் புலிகள் தமிழகத்தில் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று ஜெயலலிதா சமீபத்தில்தான்பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications