ஆண்டிப்பட்டியிலும் இடைத் தேர்தல் ரத்தாகுமா?
சென்னை:
ஆண்டிப்பட்டியிலும் இடைத் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுப்பதால்,தேர்தலுக்கான முறையான அறிவிப்பை வெளியிடலாமா, வேண்டாமா என்று தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்துவருகிறது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் நடந்த முறைகேடு காரணமாக, சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில்இடைத் தேர்தலை தலைமை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது.
ஆனால் ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தல் நடக்கும் என்று அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆண்டிப்பட்டியிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள்வலியுறுத்தி வருகின்றன.
திமுக, மதிமுக உள்பட அனைத்து எதிர்க் கட்சியினரும் இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இப்பிரச்சனையில் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் கமிஷன்உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆண்டிப்பட்டித் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்துவதற்கான முறையான அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்பட்டால் இன்று முதலே வேட்பு மனுத்தாக்கலும்தொடங்கும்.
அதற்குள் தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வரவில்லையென்றால் இத் தேர்தலை புறக்கணிப்பது தொடர்பாகவும்எதிர்க்கட்சிகள் ஆலோசனை செய்து வருகின்றன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications