ஆண்டிப்பட்டியில் வேட்புமனுத் தாக்கல் துவக்கம் - பலத்த பாதுகாப்பு
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இன்று (வியாழக்கிழமை) காலை வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.மாவட்டம் முழுவதும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி சைதாப்பேட்டை, வாணியம்பாடி, ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில்தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால் வாக்காளர் பட்டியல் குளறுபடியால் ஆண்டிப்பட்டித் தவிர மற்றதொகுதிகளின் தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்து உத்தரவிட்டது.
இந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்துவேட்பு மனுத்தாக்கல் துவங்கியது. வரும் 24ம் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
இதனால் ஆண்டிப்பட்டி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலகத்தில் சவுக்குக் கட்டைகளால் ஆன தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
பாதுகாப்புக் குறித்து தேனி மாவட்ட காவல் துறை ஆணையர் வன்னியப் பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. பதட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும்பகுதிகளில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் போலீஸ் அதிகாரிகளிடம் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக கடைப் பிடிக்கும்படிஉத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர்.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருபவர்கள் மூன்று வாகனங்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்றும்கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். கட்சிக்காரர்கள் ஊர்வலமாக வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கல் தினங்களில் தேனி மற்றும் ஆண்டிப்பட்டியில் 2 டி.எஸ்.பிக்களின் தலைமையில் 50 போலீசார்கொண்ட குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்.
வேட்பு மனுத்தாக்கலின்போது வேட்பாளர்கள், தங்களது தொண்டர்களுடன் ஊர்வலமாக செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் தொடர்பான அனைத்துத் தகவல்களும்உடனுக்குடன் சம்பந்தப்பட்ட தேர்தல் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.
இதுவரை தேர்தல் தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிமுக தொண்டர்கள் மீது 12வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரவு 11 மணி வரை மட்டுமே வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படுவர். பிரசாரத்தின்போதுவாகனங்களைப் பயன்படுத்தினால் அதுவும் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.
அங்கீகக்கப்படாத வாகனங்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டிக் கொண்டு பிரசாரம் செய்தால் வாகனமும்ஒலிபெருக்கியும் பறிதல் செய்யப்படும். பிரசாரங்களின்போது ஊர்வலம் செல்லலாம். அதற்குத் தடை இல்லை.
சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களின் முறையான அனுமதி பெற்ற பிறகேஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் வேட்பாளர்கள் அங்கு 3 நமிடங்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவர்.பொதுக்கூட்டம் போல நீண்ட நேரம் பேச அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆண்டிப்பட்டியில் மொத்தம் 216 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 150 சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 3 பூத்களுக்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர் என்ற விகிதத்தில் பாதுகாப்புகொடுக்கப்படும்.
தேனி மாவட்ட போலீசார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். தேவைப்பட்டால் திண்டுக்கல் மாவட்டபோலீஸார் வரவழைக்கப்படுவர் என்றார் வன்னியப் பெருமாள்.
இதுவரை இன்று சுயேச்சையாக பத்மராஜன் என்ற ஒருவர் ஆண்டிப்பட்டியில் போட்டியிட மனுத்தாக்கல்செய்துள்ளார்.
சூடுபிடிக்கும் பிரசாரம்
இதற்கிடையே ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.
ஜெயலலிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் அதிகவினர் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்.ஆங்காங்கே மிச்சம் மீதமிருந்த சுவர்களிலும் ஜெயலலிதாவின் பெயரைப் பொறிக்கத் தொடங்கி விட்டனர்.
பிற கட்சியினரும் கூட தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். ஆனால் இக்கட்சிகளின்வேட்பாளர்கள் யார் என்று தெரியாத நிலையில் அதிமுக ஆட்சியை விமர்சித்து ஆட்டோக்களில் ஒலிபெருக்கிபிரசாரம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications