சாய்பாபாவை சுட்டுக் கொல்ல முயற்சித்த தமிழர்
பெங்களூர்:
பகவான் ஸ்ரீ சாய்பாபாவை இன்று (வியாழக்கிழமை) சுட்டுக் கொல்ல முயற்சித்த ஒரு தமிழனைப் போலீசார் கைதுசெய்தனர்.
பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள "பிருந்தாவன் ஆசிரம"த்தில் சாய்பாபாவின் ஆசியைப் பெறுவதற்காக ஏராளமானபக்தர்கள் கூடியிருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் திடீரென்று சாய்பாபாவைத் கைத்துப்பாக்கியால் சுட முயற்சித்தான்.
ஆனால் அங்கிருந்த சேவா தளத் தொண்டர்களும் போலீசாரும் உடனடியாகச் செயல்பட்டு அவன்சுடுவதற்குள்ளாகவே அவனை மடக்கிப் பிடித்து விட்டனர்.
பிடிபட்ட அந்த நபரின் பெயர் சோமசுந்தரம் என்றும் 26 வயதான அவன் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்என்றும் போலீசார் கூறினர். அவன் ஏன் ஸ்ரீ சாய்பாபாவைக் கொல்ல முயற்சி செய்தான் என்பது குறித்த விவரம்தெரியவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விடுதலைப் புலிகளிடமிருந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாக வந்ததகவலை அடுத்து, 76 வயதாகும் சாய்பாபாவுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவன் சாய்பாபாவைக் கொல்ல முயற்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில்தான் சாய்பாபா இருப்பார்.எப்போதாவது ஒரு முறைதான் அவர் "பிருந்தாவன் ஆசிரம"த்திற்கு வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் உலகம் முழுவதும் பரவியுள்ள லட்சக்கணக்கான சாய்பாபா பக்தர்களிடையே பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications