மேலும் 2 பார்வையாளர்கள் நியமனம்: தீவிரமாக கண்காணிக்கிறது தேர்தல் கமிஷன்
டெல்லி:
ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டித் தொகுதிக்கான இடைத்தேர்தலைக் கண்காணிக்க மொத்தம் 4பார்வையாளர்களை தலைமைத் தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
ஆண்டிப்பட்டித் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அரசு இயந்திரங்கள் தவறாகபயன்படுத்தப்பட்டு வருவதாகவும் திமுக உட்பட பல கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டன.
அங்கு ஜெயலலிதா போட்டியிடுவதால், அவரை ஜெயிக்க வைக்க ஆளுங்கட்சி முயற்சிக்கும் என்ற புகாரை தேர்தல்கமிஷன் பரிசீலித்தது. மேலும் இத்தொகுதியில் அரசு இயந்திரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு, பதட்டமானசம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் கமிஷனும் கருதியது.
எனவே ஆண்டிப்பட்டி தேர்தலில் தனி கவனம் செலுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இது தொடர்பாகதுணைத் தேர்தல் கமிஷனர் சயான் சாட்டர்ஜி டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டி மிகவும் பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவேஇத்தேர்தலை மிகவும் தீவிரமாக கண்காணிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
எனவே இந்த தேர்தலை கண்காணிக்க 4 மத்திய பார்வையாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான எம்.கே.கண்ணா, வில்லிஸ் ஹென்ஷிங் ஆகிய 2 அதிகாரிகளும், இம்மாதம் 20ம் தேதிமுதல் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிக்கை முடிவடையும் பிப்ரவரி 24ம் தேதி வரை தேர்தல் நடைமுறைகளைக்கண்காணிப்பர்.
ஏற்கனவே ஆண்டிப்பட்டி தொகுதிக்கு ஏ.பிரகாஷ், தேபாஷிஷ் குமார் சவுத்ரி ஆகிய 2 அதிகாரிகள்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதில் 3 பேர் பொதுப் பார்வையாளர்களாகவும், ஒருவர் செலவுகளைக் கண்காணிப்பவராகவும் செயல்படுவர்.இதன் மூலம் ஆண்டிப்பட்டி தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பது உறுதி செய்யப்படும் என்றுசாட்டர்ஜி கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications