புதிய ஆளுநர் ராமமோகன் ராவ் இன்று பதவியேற்பு
சென்னை:
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பி.எஸ். ராமமோகன் ராவ் இன்று (வெள்ளிக்கிழமை)பதவியேற்றுக் கொள்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதாவை முதல்வர் பதவி வகிக்க அழைத்ததாகப் புகார் கூறப்பட்ட பாத்திமாபீவி, தமிழக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஆந்திர ஆளுநரான டாக்டர் சி. ரங்கராஜனே தமிழக ஆளுநராகக் கூடுதல் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக ராமமோகன் ராவ் கடந்த 8ம் தேதி ஜனாதிபதி கே.ஆர். நாராயணனால்நியமிக்கப்பட்டார்.
நாளை சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் திருப்பதியிலிருந்து சென்னைக்கு வரும் ராமமோகன் ராவ், ராஜ் பவனில்தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று காலை 10.15 மணிக்குப் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு சென்னைஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
ஓய்வு பெற்ற ஆந்திர மாநில டி.ஜி.பியான 67 வயதாகும் ராமமோகன் ராவ், சென்னை பிரசிடென்சிகல்லூரியில்தான் (முதுகலை-இயற்பியல்) படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் சென்னைக்கு வருவது ஏதோ சொந்த ஊருக்குப் போவதைப் போல உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தின் இடைக்கால ஆளுநராக இருந்து வரும் ஆந்திர மாநில ஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜன்இன்று காலை விடை பெற்றுக் கொண்டு ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். நேற்று இவரை தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் ராஜ் பவனில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications