ஜெ. - பாஜக தலைவர் திடீர் சந்திப்பு
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை மத்திய சிறுதொழில் துறைஇணை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) திடீரென்றுசந்தித்துப் பேசினார்.
கடந்த சில மாதங்களாகவே பாஜகவுடனான அதிமுகவின் போக்கும் அதிமுகவுடனான பாஜகவின் போக்கும்பெரிதும் மாறியுள்ளன.
திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது, தமிழக அரசைக் கவிழ்ப்பதற்கு அவர் எவ்வளவோமுயன்றும் மத்திய அரசு இதை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை.
அப்போதிலிருந்தே பாஜகவை அதிமுக விமர்சித்துப் பேசுவது முழுவதுமாக நின்று போனது.
பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பாஜக-அதிமுக உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறதோ என்று அனைவரும்சந்தேகப்படும் அளவுக்கு இது வளர்ந்தது.
இதனால் கருணாநிதி மிகவும் எரிச்சல் அடைந்தார். மேலும் தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ்மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாஜக-அதிமுக "உறவை"க் கண்டு அதிர்ச்சியடைந்து கூட்டணியை விட்டேவெளியேறின.
ஆனால் தமிழக பாஜகவினரோ அதிமுகவுடன் மீண்டும் உறவு ஏற்பட்டு விட்டதைத் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் அதிமுக சேரலாம் என்ற சூழ்நிலையில், இன்று வசுந்தரா ராஜே சிந்தியாதிடீரென்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சுமார் 30 நிமிட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.பின்னர் வெளியே வந்த வசுந்தராவின் கார், அங்கு ஏராளமாகக் கூடியிருந்த பத்திரிக்கை நிருபர்களைக் கண்டதும்விருட்டென்று கிளம்பி மறைந்தது.
திமுக தலைவரையும் வசுந்தரா இன்று மாலை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பாஜக தலைவர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்து அவரைச் சந்திப்பது கடந்த 2 ஆண்டுகளில் இதுதான் முதல்முறையாகும்.
மத்திய அரசை எதிர்க்கும் போக்கை அதிமுக கடைப்பிடிக்காது என்று நேற்றுதான் ஜெயலலிதா கூறியிருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் எந்தக் கூட்டணியில் இருப்போம் என்பதை இப்போது கூறமுடியாதுஎன்றும் நேற்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டுச் சென்றது அரசியல்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், திமுகவினரின் வயிற்றில் புளியையும்கரைத்துள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications