ஜெயலலிதாவுக்கு வீடு தயார்: 2 சுயேச்சைகள் மனு தாக்கல்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 2 சுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.
இங்கு மனு தாக்கல் கடந்த 17ம் தேதி தொடங்கியது. தேனி கலெக்டர் அலுவலகத்திலும், ஆணடிப்பட்டி தாலுகாஅலுவலகத்திலும் இதற்கான வேட்பு மனுக்கள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தான் 2 சுயேச்சைகள் வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர்.
ஜெயலலிதா வரும் 24ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிவிரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
மதிமுக சார்பில் ஜெயச்சந்திரன் போட்டியிடும் நிலையில் திமுக இன்னும் தனது வேட்பாளரையேஅறிவிக்கவில்லை.
ஜெயலலிதா தேனியில் தங்கி பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தேனியில் மிகப்பெரிய பங்களா தயாராகிவிட்டது. பெயிண்ட் அடிக்கப்பட்டு அந்த வீட்டின் டைல்கள் மாற்றப்பட்டு, ஜன்னல்களில்எல்லாம் புதிய கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுவிட்டது.
வீட்டைச் சுற்றிய சுவர்களின் உயரமும் கூட்டப்பட்டு வருகிறது. இந்த வீடு இப்போதே போலீசாரின் பாதுகாப்பில்கொண்டு வரப்பட்டுவிட்டது.
ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்யப் போகும் தாலுகா அலுவலகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.அலுவலகத்தைச் சுற்றியும் முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தில் இருந்து அரை கி.மீ.நீளத்துக்கு இரு புறமும் சாலைத் தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications