பன்னீரைச் சந்தித்தார் வெங்கையா நாயுடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று(திங்கள்கிழமை) சந்தித்துப் பேசினார்.
சென்னை தலைமை செயலகத்தில் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். இந்தக்கூட்டத்தில் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்.
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வெங்கையா நாயுடு, கிராமப்புறங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறுவசதிகளுக்கு, பிரதமர் நல நிதியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
இதற்கு பிரதமர் அனுமதியளித்துள்ளதாகவும் வெங்கையா நாயுடு கூறினார்.
பின்னர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து சிறிது நேரம் வெங்கையா நாயுடு பேசிக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications