டான்சி வழக்கு: ஜெ., சசிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டான்சி நிலபேர ஊழல் தொடர்பாக முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தமிழக அரசுக்கும் நோட்டீஸ்அனுப்ப உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.

டான்சி வழக்கில் ஜெயலலிதா உள்பட அனைவரையும் விடுதலை செய்து கடந்த டிசம்பர் 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி மற்றும் ஜனதாகட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த மேல் முறையீட்டு மனுக்கள் மீது நீதிபதிகள் கே.டி. தாமஸ் மற்றும் எஸ்.என். புக்கான் ஆகியோர் அடங்கியஉச்ச நீதிமன்ற பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது.

இதையடுத்து, டான்சி நிலபேர ஊழல் தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா மற்றும் தமிழக அரசுக்கும் நோட்டீஸ்அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க நீதிபதிகள் இருவரும் மறுத்து விட்டனர்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தால், ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிட முடியாதசூழ்நிலை உருவாகியிருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+