தமிழக கல்வித் திட்டத்தில் ஹிந்திக்குத் தடை
சென்னை:
தமிழக கல்வித்திட்டத்தில் ஹிந்திக்கு இடமில்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்று கல்விஅமைச்சர் தம்பிதுரை கூறியுள்ளார்.
தமிழக பள்ளிகளில் தேசிய (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு கருத்தரங்கம்நேற்று (திங்கட்கிழமை) சென்னையில் துவங்கியது. இந்த கருத்தரங்கில் தம்பிதுரை, ஆசிரியர் கல்வி இயக்ககஇயக்குனர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரு நாள் நடக்கும் இந்த கருத்தரங்கில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் பரிந்துரைகளை தமிழககல்வித்திட்டதில் வழிமுறைப்படுத்துவது பற்றி விவாதிக்கப்படும். பின்னர் தமிழக கல்விக்குழு தயாரிக்கும்பரிந்துரைகளை தேசிய குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து தம்பிதுரை பேசியதாவது:
தேசிய கல்விக்குழு மும்மொழிக் கொள்கையை வற்புறுத்துகிறது. முதலாவதாக பிராந்திய மொழியும்,இரண்டாவதாக ஆங்கிலமும், மூன்றாவதாக ஹிந்தியும் படத்திட்டத்தில் கட்டாயமாக்க மத்திய அரசு வற்புறுத்திவருகிறது.
மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க வேண்டும் என்று கூறும் மத்திய அரசு, அதே நேரத்தில் மும்மொழிக்கொள்கையை புகுத்தி சிரமத்தை அதிகரிக்கிறது.
தமிழக மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவுக்காக ஆங்கிலத்தில் படிப்பது தவிர்க்க முடியாதது.
இந்நிலையில் ஹிந்தி மொழிக்கு இங்கு அவசியமே இல்லை. மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் இடம்பெறுவதற்கு மட்டுமே ஹிந்தி உதவும்.
எனவே தமிழகத்தில் பயிற்று மொழி தமிழாக இருக்கும். உயர்கல்வி ஆங்கிலத்தில் கற்றுத் தரப்படும். இங்குமூன்றாவது மொழிக்கு இடமில்லை. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இந்த விஷயத்தில் தேசிய கல்விக்குழுவின் பரிந்துரைகளை ஏற்க மாட்டோம் என்று தம்பிதுரை கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications