தாக்குதலில் ஐ.எஸ்.ஐக்கு தொடர்பில்லை: அமெரிக்கா
டெல்லி:
கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க மையத்தில் நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள்தான் ஈடுபட்டனர் என்பதற்குப்போதுமான ஆதாரம் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லும் முன் அதற்கான போதுமான ஆதாரங்களைத்தரவேண்டும் என்றும் பெளச்சர் கூறினார்.
ஆனால் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான இடங்களுக்கும் கட்டடங்களுக்கும் தொடர்ந்துமிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான் என்றும் பெளச்சர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் போலீசாருக்கு எதிரானதா அல்லது அமெரிக்காவுக்கு எதிரானதா என்பதை இப்போதே சொல்வதுமிகக் கடினம் என்று கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி கிறிஸ்டோபர் சான்ட்ரோலினிகூறினார்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க நிலை மீது இப்போதுதான் முதல் முறையாகத் தாக்குதல் நடந்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications