வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கிச் சூடு
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் தமிழக மீனவர்கள் மீது ஹெலிகாப்டரில் வந்த இலங்கை ராணுவத்தினர்சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 9 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் துவங்கியுள்ளது. இதனால் தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரிபோன்ற பல்வேறு மாவட்டங்கிளில் இருந்து மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி 65 பைபர் படுகு, 40 கண்ணாடி இழைப் படகு, 60 வல்லம், 80 லாஞ்சர் மற்றும்200க்கும் மேற்பட்ட படகுகள் கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் சென்றன.
இதில் தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கு சொந்தமான படகில் செல்வம்(25), லெனின் (21), சம்பத்குமார் (21), குழந்தைவேல் (37) ஆகிய நான்கு பேரும், இன்னொரு படகில் பிச்சையா(27), ரவி (31), முருகையன் (35), ராஜ்மோகன் (20), அண்ட்ரூஸ் (33) ஆகியோரும் மாலை 5.30க்கு வலை விரித்துமீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து வந்து மீனவர்களின் படகுகளை நோக்கிசராமாரியாக குண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் மயிரிழையில் உயிர் தப்பிய மீனவர்கள் உயிருக்கு அஞ்சி வலைகளை சுருட்டிக் கொண்டு கரையை நோக்கிவந்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான கப்பல் ஒன்று இவர்களது படகின் மீதுமோதி கட்டை மற்றும் நைலான் கயிறுகளால் மீனவர்களை அடித்துக் காயப்படுத்தினர்.
இதில் படுகாயமடைந்த 9 மீனவர்களும் கரை திரும்பி விட்டனர். அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தநூற்றுக்கணக்கான மீனவர்களும் மீன் பிடிக்காமல் கரைக்குத் திரும்பினர்.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால்அந்த பகுதியில் பரபரப்பமும், பதட்டமும் நிலவுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications