சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை
சென்னை:
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சிநடத்தப்பட்டது.
53வது குடியரசு தினத்துக்கான அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை மெரீனாகடற்கரையில் இன்று நடைபெற்றது.
அணிவகுப்பின் முதல் வரிசையில் ராணுவம், கப்பற்படை, விமானப்படையைச் சேர்ந்த வீரர்கள் வந்தனர். மேலும்போர் விமானஙகள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள் போன்ற ராணுவத் தளவாடங்களும் அணிவகுத்து வந்தன.
பிறகு காவல் துறையினர், என்.சி.சி., பள்ளி மாணவர்கள் அணி வகுத்து வந்தனர். மேலும் குடியரசு தினத்துக்கானபள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் ஒத்திகை பார்க்கப்பட்டன.
இந்த அணிவகுப்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார், சென்னை கலெக்டர் மற்றும் அரசுஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவிஜயகுமார் கூறினார்.












Click it and Unblock the Notifications