ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க வைகை சேகர் டெல்லி கோர்ட்டில் வழக்கு
டெல்லி:
வாக்காளர் பட்டியல் தயாரித்ததில் முறைகேடு நடந்துள்ளதால் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என்று கோரி அத்தொகுதியின் திமுக வேட்பாளரான வைகை சேகர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
திமுக எம்.பியான விடுதலை விரும்பி இன்று (வியாழக்கிழமை) இதைத் தெரிவித்தார். அம்மனுவில் வைகை சேகர்கூறியிருப்பதாவது:
ஆண்டிப்பட்டியில் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பின்போது, பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள்சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் உண்மையான வாக்காளர்கள் பலருடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
எனவே ஆண்டிப்பட்டியில் இடைத் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் கமிஷனுக்கு உடனடியாக உத்தரவிடவேண்டும்.
மேலும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மனுவில்வைகை சேகர் கூறியுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் சரீன், இதன் மீதான விசாரணை வரும்29ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தேர்தல் கமிஷனுடைய பதில் என்னவென்று அறிவதற்காக இந்த மனு மீதான விசாரணை 29ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விடுதலை விரும்பி கூறினார்.
ஆண்டிப்பட்டி தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளநிலையில் இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதே எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றிஎன்றார் விடுதலை விரும்பி.
இதனால் விரைவில் இது தொடர்பாக நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும் விடுதலை விரும்பி நம்பிக்கை தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications