குடியரசு தினம்: கடும் பாதுகாப்பு-- முஷாரப் வாழ்த்து!
டெல்லி:
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
நாளை குடியரசு தினத்தன்று டெல்லியில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடப் போவதாக உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து டெல்லியில் வரலாறு காணாத அளவில் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. டெல்லி ரயில் நிலையம்,விமான நிலையம், பஸ் நிலையம் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுததப்பட்டுள்ளது.
டெல்லியில் உயரமான கட்டடங்கள் அனைத்தும் இன்று பிற்பகல் முதல் சீல் வைக்கப்பட்டுவிட்டன. உயரமானகட்டடங்களில் உள்ள அலுவலகங்கள் அனைத்தும் பிற்பகல் முதல் மூடப்பட்டுவிட்டன. அதே போல அடுக்குமாடிக் கட்டடங்களில் வசிப்போர் தங்களுக்குத் தெரியாத யாரையும் கட்டடத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாதுஎன உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் அஜய் ராஜ் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:
குடியரசு தினத்தை ஒட்டி தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபட உள்ளனர். மேலும் முக்கியத் தலைவர்களையும்கொல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் தரை வழியாகவும் வான் வழியாகவும் வரும் எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் டெல்லிமுழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் மற்றும் ராணுவ கமாண்டோக்கள் முக்கிய இடங்களில்நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் இடங்களைச் சுற்றி விமான எதிர்ப்பு பீரங்கி, வெடிகுண்டுநிபுணர்கள், மோப்ப நாய்கள், சிறப்புக் கமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களின் மாடிகளில் பாதுகாப்புக்காக ஏராளமானகமாண்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ராணுவமும், விமானப்படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் நாடு முழுவதும் குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முஷாரப் வாழ்த்து:
எந்த நாட்டின் தலையீட்டினால் இந்தியா தனது குடியரசு தினத்தன்று இத்தனை பாதுகாப்பை மேற்கொள்ளவேண்டியுள்ளதோ அதே நாட்டின் அதிபர் குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்கு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் தனது குடியரசுதின வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
அதில், பாகிஸ்தான் மக்களின் சார்பில் இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த வாழ்த்துச் செய்தியில்கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications