அக்னி சோதனைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு
டெல்லி:
இந்தியா நடத்திய அணுகுண்டு ஏந்திச் செல்லும் திறன் மிக்க அக்னி ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா தவிர்த்தபிற உலக நாடுகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க நெருக்குதலுக்கு இந்தியா பணிந்து வருவதாக பரவலாகஒரு கருத்து ஏற்பட்டுவரும் நிலையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டிப்பது தனது பாதுகாப்பு விவகாரத்தில் எந்தநாட்டின் தலையீட்டையும் ஏற்க முடியாது என்பதை இந்தியா வெளியுலகுக்கு எடுத்துக் காட்டிவிட்டது.
இதன்மூலம் பாகிஸ்தானுக்கு நேரடியாகவும் சீனாவுக்கு மறைமுகமாகவும் இந்தியா தனது எச்சரிக்கைவிடுத்துள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா எதிர்க்காதது ஏன்?
இந்தச் சோதனையை அமெரிக்கா எதிர்க்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் நேற்று தான் அமெரிக்காவும் ஒருஏவுகணைச் சோதனையை நடத்தியது. ஏவுகணைகளுக்கு எதிரான கவசத்தை உருவாக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ள அமெரிக்கா நேற்று இதற்குத் தேவையான ஒரு ஏவுகணைச் சோதனையை நடத்தியது.
இந்திய ஏவுகணைச் சோதனை குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின்பாவல், இது பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல. இச் சோதனையால் தெற்காசியாவின் அமைதி பாதிக்கப்படாது.இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தச் சூழ்நிலையில் சோதனையைஇந்தியா நடத்தியிருக்க வேண்டாம். இருந்தாலும் இச் சோதனையால் எந்தப் பிரச்சனையும் வராது என்றார்.
சீனா மறைமுகத் தாக்குதல்:
பாகிஸ்தானுக்கு ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வழங்கி வரும் மிக முக்கிய நாடான சீனா, இந்த ஏவுகணைச்சோதனையை நேரடியாக கண்டிக்கவில்லை என்றாலும் மறைமுகமாகத் தாக்கியுள்ளது.
தெற்கு ஆசியப் பகுதியில் அமைதியை கட்டிக்காக்க அனைத்து நாடுகளும் முயற்சி மேற்கொள்வார்கள் எனநம்புகிறோம் என சீனா கூறியுள்ளது.
இந்தியாவின் அக்னி சீனாவையும் தாக்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து எதிர்ப்பு:
இந்தியா நடத்தியுள்ள அக்னி சோதனை தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் என இங்கிலாந்து கூறியுள்ளது.இந்த நேரத்தில் இச் சோதனையை இந்தியா தவிர்த்திருக்க வேண்டும் என அந் நாடு கூறியுள்ளது.
ஜப்பான் வருத்தம்:
இந்தியாவின் ஏவுகணைச் சோதனை வருத்தமளிக்கிறது என ஜப்பான் கூறியுள்ளது. இந்திய-பாகிஸ்தான்எல்லையில் இப்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை இது மேலும் மோசமாக்கும். விரைவில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறோம் எனவும் ஜப்பான் கூறியுள்ளது.
எதிர்மறையான செயல்: ஐரோப்பிய யூனியன்:
இந்தியா நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் தெற்காசியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே எதிர்மறையானவிளைவுகளை ஏற்படுத்தும் என ஐரோப்பிய யூனியன் கருத்துத் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தச் சோதனையை இந்தியா தனது பாதுகாப்புக்காக நடத்தியுள்ளது என ரஷ்யா நேற்றே கருத்துத்தெரிவித்துவிட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications