பாதுகாப்பு: டெல்லியில் விமானங்கள், ரயில்களுக்குத் தடை
டெல்லி:
ராணுவ அணிவகுப்பையொட்டி டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
டெல்லிக்கு வந்த ரயில்கள் கூட நிறுத்தப்பட்டன. காலை 8 மணி முதலே டெல்லியின் மீது விமானங்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டது. பகல் 12 மணி வரை இந்தத் தடை நீடித்தது. ரயில்கள் அனைத்துமே டெல்லிக்குவெளியிலேயே நிறுத்தப்பட்டு ராணுவ அணிவகுப்பு முடிந்த பின்னர் தான் மேற்கொண்டு செல்லஅனுமதிக்கப்பட்டன.
மேலும் சில ரயில்களை வடக்கு ரயில்வே ரத்து செய்துவிட்டது. இந்த அணிவகுப்பு செல்லும் பாதையில் தில்க்பிரிட்ஜ் என்ற ரயில்வே பாலம் இருப்பதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் பொம்மை விமானங்கள் மற்றும் ஆளில்லாமல் பறக்கும் சிறிய ரகவிமானங்களைக் கொண்டு அணிவகுப்பின் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததை உளவுப்பிரிவுகள் கண்டுபிடித்தன.
தீவிரவாதிகளின் வயர்லெஸ் பேச்சுகளை இடைமறித்துக் கேட்ட இந்திய ராணுமும் இத்தகவலை உறுதி செய்தது.இதையடுத்து விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக உயரதிகாரியொருவர்தெரிவித்தார்.
அணிவகுப்பு வந்த பாதையில் 8 இடங்களில் விமான எதிர்ப்பு பீரங்கிகள் நிறுத்தப்பட்டன. அணிவகுப்பின் தூரமும்குறைக்கப்பட்டது.
மாபெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் தான் ராணுவ அணிவகுப்பு அமைதியாக நடந்து முடிந்தது.
காஷ்மீரில் டி.வி. வாகனம் மூது தாக்குதல்:
இந்தியத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனுக்குச் சொந்தமான வேன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில்அந்த வேனில் இருந்த டிரான்ஸ்மிட்டர் சேதமடைந்தது.
காஷ்மீரில் நடந்த குடியரசு தின விழாவை தொலைக்காட்சியில் நேரில் ஒளிபரப்புவதற்காக சென்று கொண்டிருந்தஇந்த வேன் மீது அதிகாலை 3 மணிக்கு பந்திபுரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் கிரனைட்கள், ராக்கெட்டுகளால்தாக்கினர்.
ஒரிஸ்ஸாவில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு:
ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி நடந்த இடத்தின் அருகே பலூன் விற்பவரின்சிலிண்டர் வெடித்ததில் பல குழந்தைகள் காயமடைந்தனர்.
மொத்தம் 22 பேர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். காயமடைந்தவர்களில் 14 பேரின்நிலையை மிக மோசமாக உள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்களை முதல்வர் நவீன் பதக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆளுநர் கொடியேற்றிய சிறிது நேரத்தில் இச் சம்பவம் நடந்தது. சிலிண்டர் வெடித்ததை குண்டு வெடித்தாகநினைத்த மக்கள் அலறியடித்துக் கொண்டி சிதறி ஓடினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications