ராமர் கோவில் நிலத்தைத் தர முடியாது: வாஜ்பாய் உறுதி
டெல்லி:
எக்காரணத்தைக் கொண்டும் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை விசுவ ஹிந்து பரிஷத்திடம் மத்தியஅரசு கொடுக்காது என்று பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உறுதியுடன் கூறிவிட்டார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் வரும் மார்ச் 12ம் தேதி ராமர் கோவில் கட்டும் பணி ஆரம்பமாகும் என்றுஏற்கனவே விசுவ ஹிந்து அமைப்பினர் கூறியிருந்தனர்.
ஆனால், சர்ச்சைக்குரிய அந்த இடத்தை மத்திய அரசு கொடுத்துவிட்டால் அந்தத் தேதிக்கு முன்னதாகவேகட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் அவர்கள் நடத்தியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பது தொடர்பாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 6,500தலைவர்கள் கடந்த 21ம் தேதி காலை அயோத்தியிலிருந்து டெல்லிக்கு "எச்சரிக்கை" பேரணி மேற்கொண்டனர்.
இந்தப் பேரணி நேற்று மாலை டெல்லி வந்து சேர்ந்தது.
பேரணியில் வந்த வி.எச்.பி. தலைவர் அஷோக் சிங்கால் உள்பட 6 சாதுக்கள் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாகவாஜ்பாயைச் சந்தித்து பேசினர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை துவங்குவதற்கு வசதியாக உடனடியாக அதற்கான நிலத்தைத்தங்களிடம் தருமாறு அவர்கள் வாஜ்பாயை வற்புறுத்தினர்.
ஆனால் சர்ச்சைக்குரிய அந்த இடத்தை விசுவ ஹிந்து பரிஷத்திடம் கொடுப்பதற்கு வாஜ்பாய் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக அவர் ஏற்கனவே எதிர்க் கட்சிகளிடமும் பேசி முடிவெடுத்து விட்டார்.
அந்த நிலத்தை அரசு தராவிட்டாலும்கூட மார்ச் 12ம் தேதி எப்படியும் அவ்விடத்தில் கோவில் கட்டுமானப்பணியைத் துவக்கி விடுவோம் என்றும் விசுவ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications