கடலூரில் ஈவ் டீசிங்: இளம்பெண் தற்கொலை
கடலூர்:
கடலூரில் ஈவ் டீசிங் கொடுமை காரணமாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூரைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் இந்திராணி (16). இந்திராணி ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்லும் வழியில் அங்கு நின்று கொண்டிருந்த அய்யனார்,பெருமாள், ராஜிவ்காந்தி உட்பட நான்கு பேர் சேர்ந்து இந்திராணியை கிண்டல் செய்தார்.
தன்னை சிலர் கேலி செய்வது குறித்து தனது தாய் மலர்க்கொடியிடம் இந்திராணி கூறி அழுதார். உடனேமலர்க்கொடி மகளைக் கேலி செய்தவர்களிடம் சென்று சண்டை போட்டார்.
அதற்கு இந்திராணியை கேலி செய்தவர்கள் மலர்க்கொடியின் குடும்பத்தையும், இந்திராணியையும் அசிங்கமானவார்த்தைகளால் திட்டினர்.
இதனால் மனமுடைந்த இந்திராணி பூச்சி மருந்தை குடித்து விட்டார். உடனடியாக அவரை அரசு மருத்துவனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம்தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை கடலூர் அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது இந்திராணியின் தாயார் நடந்த சம்பவங்கள் குறித்து அமைச்சரிடம் விளக்கினார். உடனே அவர்நடவடிக்கை எடுக்காத போலீசாரை கடிந்து கொண்டு, கலெக்டரை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறுகேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இந்திராணி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இந்திராணியை கேலி செய்து அவரைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் 8ம் வகுப்பு மாணவன் பெருமாள்என்பவனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications