சிங்கமா, சிறுத்தையா? - தொடரும் வண்டலூர் திகில்
சென்னை:
சென்னை-வண்டலூர் அருகே தேடப்பட்டுக் கொண்டிருக்கும் விலங்கு சிங்கமா சிறுத்தையா என்ற சந்தேகம் இப்போது வலுத்துள்ளது.
வண்டலூரில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா உள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த விலங்கியல் பூங்காவில் சிங்கம் உள்ளிட்ட பல்வேறுவகையான விலங்குகள் உள்ளன.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பூங்காவிற்கு அருகே உள்ள கேளம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில், ஒரு சிங்கத்தைப் பார்த்ததாக மோட்டார் சைக்கிளில்வந்த ஒருவர் பூங்கா ஊழியர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து பூங்கா நிர்வாகிகளிடையே பதற்றம் ஏற்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர் கூறிய இடத்திற்குப் போய்ப் பார்த்தனர். அங்கு சிங்கத்தின் காலடித் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பூங்காமூடப்பட்டது.
பூங்காவில் இருந்த சிங்கங்கள், சிறுத்தைகள் போன்றவை சரிபார்க்கப்பட்டன. அப்போது அத்தனை விலங்குகளும் சரியாகவே இருப்பதாக பூங்கா இயக்குநர்தியாகி அறிவித்தார்.
இதையடுத்து மேலும் குழப்பம் ஏற்பட்டது. அப்படியென்றால் சாலையில் பார்த்ததாக கூறப்பட்டது என்ன என்ற குழப்பம் எழுந்தது.
இருப்பினும் அந்த மர்ம விலங்கைத் தேடும் பணியில் பூங்கா பாதுகாவலர்கள் ஈடுபட்டனர். 300க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிகளுடன் இந்தப் பணியில்ஈடுபடுத்தப்பட்டனர்.
இருப்பினும் இதுவரை அந்த மர்ம விலங்கு கண்ணில் தென்படவில்லை. ஆனால் காலடித் தடம், விலங்கின் கழிவும் ஆங்காங்கே கிடைத்துள்ளன. காலடித் தடத்தைவைத்துப் பார்க்கும்போது அது சிறுத்தையாக இருக்கலாம் என்று பூங்கா அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.
மேலும் அது பூங்காவிற்குள்ளேயேதான் இருக்கும் என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
குஜராத்தில் உள்ள கிர் தேசியப் பூங்கா அதிகாரிகளுக்கு அந்த விலங்கின் காலடித் தடப் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர்களாலும் அந்தக்காலடித் தடத்தை வைத்து என்ன மிருகம் என்று அடையாளம் காண முடியவில்லை. இந்நிலையில் விரைவில் அந்த மர்ம விலங்கு பிடிபடும் என்று தியாகிதெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பூங்கா ஊழியர்கள் அந்த சிங்கத்தைப் பார்த்ததாகவும் நேற்றைக்குள்ளாகவே அதைப் பிடித்துவிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகினஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications