விரைவில் நிரந்தர போர்நிறுத்தம்: புலிகள் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் விரைவில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரானஆன்டன் பாலசிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 24ம் தேதிக்கு முன்னதாகவே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இந்தநிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று "தமிழ்நெட்" என்ற இணையத் தளத்துக்குநேற்று (திங்கள்கிழமை) அளித்த பேட்டியில் பாலசிங்கம் கூறியுள்ளார்.

லண்டனில் உள்ள பாலசிங்கத்தை நேற்று நார்வே தூதுக் குழுவினர் சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தைநடத்தினர்.

நிரந்தரப் போர்நிறுத்தத்திற்காக இரு தரப்பிலும் உள்ள நிபந்தனைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போதுவிவாதிக்கப்பட்டது.

இது தொடர்பான அறிக்கைகளை ஓஸ்லோவிடம் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமர்ப்பித்துள்ளதாகபாலசிங்கம் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவில் ஆரம்பித்த ஒரு மாத காலப் போர்நிறுத்தம், பிப்ரவரி 24ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாகவே நிரந்தரப் போர்நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று பாலசிங்கம்கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+