ஆனந்த விகடன் மீது தமிழக அரசு வழக்கு
சென்னை:
ஆனந்த விகடன், நெற்றிக் கண் மற்றும் ஒரு ராஜஸ்தான் பத்திரிக்கை ஆகியவை மீது தமிழக அரசு நீதிமன்றஅவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பான மனு ஒன்றை தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில்சமர்ப்பித்தது.
நீதிமன்றத்தை அவதூறு செய்யும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் நெற்றிக்கண் ஆகிய பத்திரிக்கைகளில்கட்டுரைகள் வெளியிட்டுள்ளதாகவும், ராஜஸ்தான் பத்திரிக்கையில் ஆட்சேபகரமான வகையில் கார்ட்டூன்வரையப்பட்டுள்ளதாகவும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமி ஆகியோர்முன் விசாரணைக்கு வந்தது.
ஆனந்த விகடன் மற்றும் நெற்றிக் கண் பத்திரிக்கை ஆசிரியர்கள் அடுத்த ஒரு வாரத்திற்குள் இதுகுறித்துவிளக்கமளிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் பத்திரிக்கை ஆசிரியர் அடுத்த ஒரு வாரத்திற்குள் விளக்கமளிக்கவேண்டும் என்று மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையின்போது இப்பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அப்போது சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன் தனக்கு வானளாவியஅதிகாரம் இருப்பதாகக் கூறிக் கொண்டு ஆனந்த விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியத்தைக் கைது செய்யஉத்தரவிட்டார்.
எம்.எல்.ஏக்களை விமர்சனம் செய்து விகடனில் வந்த காட்டூனுக்கு எதிராக அந்த நடவடிக்கை எடுக்கஉத்தரவிட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications