ஆண்டிப்பட்டியில் ஜெ. வெற்றி நிச்சயம்: ஜோதிடர் கணிப்பு
சேலம்:
வேட்புமனுத் தாக்கல் செய்த நேரத்தில் இருந்த கோச்சார பலன்படி ஜெயலலிதா நிச்சயம் வெற்றி பெறுவார் என்றுகோபிச் செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிடர் கணித்துள்ளார்.
தேர்தல் வந்து விட்டாலே அரசியல்வாதிகளை விட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் ஜோதிடர்கள் தான். வெற்றியைநிச்சயிப்பது ஜோதிடர்கள் தான் என்று அரசியல்வாதிகளுக்கு நினைப்பு.
தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்குமா? சீட் கிடைத்தால் எந்த நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வது? தேர்தலில்வெற்றி பெறுவேனா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜோதிடர்களை அரசியல்வாதிகள் ரகசியமாகமொய்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்த நாளின் பலன்களையும் நேரத்தையும் வைத்து,கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கோவி மஞ்சுளா ராமசாமி என்பவர் அவரது வெற்றியைக் கணித்துள்ளார்.ஜெயலலிதாவின் வெற்றி குறித்து அவர் கூறுவதாவது:
பதவிக்குரிய குரு பத்தாம் இடம் மிதுனத்தில் இருந்து சம சப்தமாக பார்க்கிறது.
வீரமிக்கவனும், தனாதிபதியும், லக்ன பாக்கியாதிபதியுமாகிய செவ்வாய் லக்னத்திலேயே இருப்பதாலும்,பொதுமக்களை குறிக்கக் கூடிய பிரகஸ்பதி வீட்டிலேயே இருப்பதாலும் மக்கள், ஜெயலலிதாவுக்கு ஆதரவாகஇருந்து பெரும் வெற்றியை ஈட்டித்தருவர்.
பதவி ஸ்தானத்தில் இருக்கும் கேது, ராகு கிரகங்கள் ஜனவரி 26ல் பெயர்ச்சியடைவதால் குழப்பத்தில் இருந்த பதவிஸ்தானத்தை அதிபதி குரு தனித்து பார்ப்பதால் பலம் பெற்று பதவி, வெற்றி நிச்சயம்.
பதவி ஸ்தானத்துக்கு ஆயுள் ஸ்தானாதிபதி சந்திரன் உச்சம் பெற்று எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறக்கூடிய சத்ருஸ்தானத்தில் இருப்பதால் பதவியும், பூரண ஆயுள் பலமும் நிச்சயம் உண்டு.
இவ்வாறு அவரது கணிப்புகள் உள்ளன. ஆனால் ஜோதிடர்களின் கணிப்பை உண்மையாக்குவதும்,பொய்யாக்குவதும் ஆண்டிப்பட்டி வாக்காளர்கள் கையில் தான் இருக்கிறது என்பதுதானே உண்மை.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications