வண்டலூர் திகில்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
சென்னை:
சிங்கம் (?) தப்பிய செய்தி காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை அருகே வண்டலூர் உயிரியல்பூங்கா மூடப்பட்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து சிங்கம் தப்பிச் சென்று விட்டதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு செய்திபரவியது. ஆனால் சிங்கம் ஏதும் தப்பவில்லை என்று பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் தப்பிய விலங்கு எது என்று தேடும் பணி தொடர்ந்தது. தப்பியது சிங்கமல்ல, சிறுத்தையாகஇருக்கலாம் என்று பின்னர் கூறப்பட்டது. ஆனால் அந்த விலங்கு, பூங்காவிலிருந்து தப்பியதல்ல, வேறுபகுதியிலிருந்து பூங்காவிற்குள் அந்த விலங்கு வந்துள்ளது என்று தற்போது கூறப்படுகிறது.
அந்த மர்ம விலங்கைப் பிடிப்பதற்கான துரித நிடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மர்ம விலங்கு நடமாட்டம் காரணமாக விலங்கியல் பூங்கா கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளது. திடீரெனவிலங்கியல் பூங்கா மூடப்பட்டு விட்டதால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள், சென்னை நகர மக்கள் பெரிதும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பலருக்கு பூங்கா மூடப்பட்டிருப்பது கூட இன்னும் தெரியவில்லை. நகரிலிருந்து பஸ், வேன்கள் மூலம் நீண்டபயணத்திற்குப் பிறகு வண்டலூர் வரும் அவர்கள் பூங்கா மூடப்பட்டிருப்பது தெரிந்து வெறுப்படைகின்றனர்.
பூங்கா மூடப்பட்டுள்ளது குறித்து பத்திரிக்கைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டால் நன்றாக இருந்திருக்கும் என்றுஅங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் பயணிகள் கூறுகின்றனர்
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications