அத்வானி மீது குற்றச்சாட்டு: சிக்கலில் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்:
ஜின்னாவைக் கொல்ல முயன்றதாக உள்துறை அமைச்சர் அத்வானி மீது சிறுபிள்ளைத்தனமாக குற்றம் சாட்டியுள்ளபாகிஸ்தான் அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் தவித்து வருகிறது.
உடனே இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 20 இந்தியர்களை ஒப்படைக்கவேண்டும் என்றது அந்த நாடு. உடனே அந்த நபர்களின் பட்டியலை இந்தியா கோரியது. ஆனால், இந்தாதருகிறோம்.. அந்தா தருகிறோம் கூறி மழுப்பி வருகிறது பாகிஸ்தான். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின்முகத்திரை கிழிக்கப்பட்டதால், இப்போது அத்வானியை தன்னுடைய பட்டியலில் சேர்க்க பாகிஸ்தான் முயற்சித்துவருகிறது.
1947ம் ஆண்டில் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனராலாக இருந்த ஜின்னாவை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தஅத்வானி உள்பட 40 பேர் அவரைக் கொல்ல
முயற்சித்ததாக இப்போது பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால், இதற்கான ஆதாரங்களே இல்லை என்ற நிலையில் ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில்உள்ளதுபாகிஸ்தான்.
சிந்து உயர் நீதிமன்றத்துலும், சிந்து நகரகோர்ட்டிலும், சிந்து உள்துறை அமைச்சகத்திலும் இதற்கான ஆவணங்களைபாகிஸ்தான் அதிகாரிகள் தேடி வருவதாக பாகிஸ்தான் கூறுகிறது.
ஆனால், போலி ஆவணங்கள் தயாரிக்கும் முயற்சியில் அந் நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தானின் த டான் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில்,
1947ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி தோத்ரம் நகரில் சிகார்பூர் காலனியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டரின் வீட்டில்குண்டு வெடித்து 2 பேர் இறந்தனர். இதையடுத்து ஜின்னாவைக் கொல்ல ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முயன்றாகவழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 15 பேருக்கு தண்டனைதரப்பட்டது. 4 பேர் விடுவிக்கப்பட்டனர். அத்வானி உள்ளிட்ட பிறர் மீது எந்தவிதமான நடவடிக்கைக்கும்உத்தரவிடப்படவில்லை என்று அந்த நாளிதழில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளை விசாரிக்க தனி கோர்ட்:
இந் நிலையில் தீவிரவாதிகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்களை அமைக்கப் போவதாக பாகிஸ்தான்அறிவித்துள்ளது.
இந்த நீதிமன்றங்களில் ராணுவ அதிகாரிகளும் பார்வையாளர்களாக இருப்பார்கள். 20 தீவிரவாதிகளையும்தன்னிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வரும் நிலையில் இந்த நீதிமன்றங்களை பாகிஸ்தான் அமைப்பதுசந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தியா கோரி வரும் தீவிரவாதிகளை இங்கே விசாரிப்பதாகக் கூறி கண்துடைப்பு விசாரணை நடத்தி பாகிஸ்தான்விடுவித்துவிடலாம். இதே போல பிற தீவிரவாதிகளுக்கும் நல்ல இமேஜ் ஏற்படுத்தித் தரவே இந்த நீதிமன்றம்உதவும் என இந்தியா கருதுகிறது.
மேலும் முஷாரபுக்கு எதிரான மதத் தலைவர்களை தீவிரவாதிகளாகக் காட்டி அவர்களுக்கு தண்டனை தரவே இந்தநீதிமன்றம் அமைக்கப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
படை வாபஸ் இல்லை: இந்தியா:
இதற்கிடையே எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெறும் எண்ணமே அரசுக்கு இல்லை எனபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தியாக வேண்டும். 20 தீவிரவாதிகளை இந்தியாவிடம்ஒப்படைக்க வேண்டும். இதன் பின்னர் தான் படை வாபஸ் குறித்து யோசிக்கப்படும்.
முதலில் படைகளைக் குவித்தது பாகிஸ்தான் தான். அவர்களை நம்பவே முடியாது. எல்லைக்கு அப்பால் இருந்துசும்மா சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார் பெர்னாண்டஸ்.












Click it and Unblock the Notifications