இன்று பாஜகவில் இணைகிறார் திருநாவுக்கரசு
டெல்லி:
எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியைக் கலைத்துவிட்டு அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு இன்று (வெள்ளிக்கிழமை)பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்றதிருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியைத் துவக்கினார்.
அதிமுவிலிருந்து பிரிந்து வந்த போதிலும், அவர் தன்னுடைய அறந்தாங்கி தொகுதியில் நின்று தொடர்ந்து வெற்றிபெற்று வந்தார்.
இதற்கிடையே சில எம்.பிக்களை வைத்துக் கொண்டு தேசிய முன்னணியிலும் அங்கம் வகித்த திருநாவுக்கரசு, தன்கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் அதற்குப் பலன்கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், எம்.ஜி.ஆர். அதிமுகவைக் கலைத்துவிட்டு பாஜகவில் சேரப்போவதாகத் திடீரென்று திருநாவுக்கரசு அறிவித்தார்.
அதன்படி இன்று வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் பாஜக தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்திஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் ஐக்கியமாகவுள்ளார் திருநாவுக்கரசு.
இதற்காக திருநாவுக்கரசும் எம்.ஜி.ஆர். அதிமுகவைச் சேர்ந்த பிரதிநிதிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும்ஏற்கனவே விமானம் மற்றும் ரயில்கள் மூலம் டெல்லி சென்று சேர்ந்துவிட்டனர்.
எந்தவிதமான நிபந்தனையுமின்றி நாங்கள் பாஜகவில் இணைகிறோம். ஆனாலும் அக்கட்சியில் எங்களுக்குகெளரவமான பதவி அளிக்கப்படும் என்று நம்புவதாக திருநாவுக்கரசு டெல்லியில் நிருபர்களிடம் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் கிருபாநிதி, பொதுச் செயலாளர் இல. கணேசன் ஆகியோரும் இன்றைய இணைப்புவிழாவில் கலந்து கொள்கின்றனர்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications