சரவணபவன்ராஜகோபால் மீண்டும் சிறையில் அடைப்பு
சென்னை:
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹோட்டல் சரவண பவன் அதிபர்ராஜகோபால் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜீவஜோதி விவகாரம் காரணமாக கைதாகியுள்ள ராஜகோபால், உடல்நலக்குறைவு காரணமாக தன்னை ஜாமீனில் விடுதலைசெய்யுமாறும், மருத்துவமனையில் சேர அனுமதிக்குமாறும் உயர்நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
ஆனால் ஜாமீன் வழங்க மறுத்து நீதிமன்றம், அவரை விஜயா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதித்தது.
இதையடுத்து டிசம்பர் 22ம் தேதி ராஜகோபால் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நீண்ட காலம்மருத்துவமனையில் தங்கியிருந்தால் சாட்சிகளை கலைக்க ராஜகோபால் முயற்சிக்கலாம் என்று வேளச்சேரி போலீஸார்உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அதே சமயம் தன்னை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்குமாறு கோரி ராஜகோபால் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில்மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இரு மனுக்களையும் பரிசீலித்த நீதிபதி மலை சுப்ரமணியம், ராஜகோபாலின் கோரிக்கையை நிராகரித்தார். பின்னர் உடனடியாகராஜகோபாலை மத்திய சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து ராஜகோபால் மீண்டும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications