ஆண்டிப்பட்டி தேர்தலுக்குப் பின் அரசியல் மாற்றம் இராது: ஜெ.
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் எந்தவிதமான அரசியல் மாற்றமும் இருக்காது என்றுமுன்னாள் தமிழக முதல்வரும் அக்கட்சி வேட்பாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 33வது நினைவு நாளையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை)சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலிசெய்தார்.
பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலுக்குப் பின் தமிழக அரசியலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது. அதிமுகவேதொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்.
ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசை விஸ்வ ஹிந்து பரிஷத் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது.ஆனாலும் மத்திய அரசு அதைச் சமாளித்து விடும்.
இருந்தாலும் நிலைமையைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் 3வது அணி அமைவது தவிர்க்க முடியாதது என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் கூறியிருப்பது அவருடைய சொந்தக் கருத்து என்றார் ஜெயலலிதா.
பிப்.13 முதல் ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம்:
இதற்கிடையே ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி பிரச்சாரத் தேதிகள் குறிக்கப்பட்டு விட்டன.
இதன்படி வரும் 13ம் தேதி தொடங்கும் ஜெயலலிதாவின் பிரச்சாரம் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று இன்றுவெளியான அதிமுகவின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 101 கிராமங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்யவுள்ளார் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளரான வைகை சேகரை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிவரும் 16ம் தேதி ஆண்டிப்பட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications