உடல் நிலை சரியில்லாத தாயார்: வேதனையில் ஒருவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள மதுரவாயல் பகுதியில் தாயார் நீண்ட நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்துவந்ததால் மன வருத்தம் அடைந்த ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரவாயல் அருகே உள்ளது நெற்குன்றம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவரது தாயார் நீண்ட நாட்களாகஉடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.
மேலும் அவ்வப்போது அவருடைய தாயாருக்கு மனநலம் பாதிக்கப்படுமாம். இதனால் மன வேதனை அடைந்தார்வேலு.
தாயார் படும் வேதனையைப் பொறுக்க முடியாமல் வேலு தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications