மழையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.25,000 நிதியுதவி
சென்னை:
தமிழகத்தில் மழையால் இறந்த 12 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படும் என்றுமுதல்வர் பன்னீர்செல்வம் இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மழை காரணமாக 12 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைந்த பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி விட்டன.
இந்நிலையில் பன்னீர்செல்வம் இன்று நிருபர்களிடம் கூறுகையில், மழையினால் இறந்த 12 பேரின்குடும்பத்தினருக்கும் தலா ரூ.25,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000 வழங்கப்படும் என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும்.
மேலும் பயிர்களையும் வீடுகளையும் கால்நடைகளையும் இழந்த மக்களுக்குத் தகுந்த உதவிகளை அளிப்பதற்கானநடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு பன்னீர்செல்வம்உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கனத்த மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவராணத்தை தமிழக அரசு வழங்கவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று திருச்சியில் கேட்டுக் கொண்டார்.
அதே போல் திருவாரூர் விவசாயிகள் சங்கமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைஉடனடியாக வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications