இந்தியாவுடன் நல்லுறவுக்கு புலிகள் விருப்பம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இந்தியாவுக்கும் தமிழ் அமைப்புகளுக்கும் மீண்டும் நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகளின்உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டதில் 2வது முக்கியமாகன குற்றவாளியாகக்கருதப்படுபவர் பொட்டு அம்மன்.

இலங்கையில் வெளியாகும் "சுடர் ஒளி" என்ற பத்திரிக்கைக்கு பொட்டு அம்மன் அளித்த பேட்டி:

இருவருமே ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாத காரணத்தால் இரு தரப்பிலுமே நிறைய இழப்புக்கள்ஏற்பட்டுள்ளன. பழைய கசப்புணர்வுகளை மறந்துவிட்டு நாம் புது உறவைத் தொடங்க வேண்டும்.

இந்தியாவுக்கு நாங்கள் ஏற்கனவே இதுகுறித்து வேண்டுகோள் அனுப்பி விட்டோம். அவர்கள் எங்களுடையஅரசியல் பிரிவுக்கு நல்லதொரு பதிலை அனுப்ப வேண்டும்.

இந்தியாவில் உள்ள எந்தப் பிரிவினைவாதக் குழுக்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

எங்களுக்கு எதிராக தமிழக மக்களைத் திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே சிலர் இந்தத் தவறானசெய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்றார் பொட்டு அம்மன்.

படகு கவிழ்ந்து 40 இலங்கை மக்களைக் காணோம்:

இதற்கிடையே சட்டவிரோதமாக இலங்கையை விட்டு படகு மூலம் வெளியேற முயன்ற அந்நாட்டு மக்களுடன்அந்தப் படகு மூழ்கியது.

புயல் காரணமாக ஏற்பட்ட கடுமையான கடல் கொந்தளிப்பினால் இந்தப் படகு இலங்கையின் தென் பகுதியில்உள்ள கடலில் மூழ்கியது.

ஆனாலும் இவர்களில் 70 பேருக்கும் மேல் நீந்தி கரையேறி விட்டனர். இந்தப் படகில் மொத்தம் எத்தனை பேர்பயணம் செய்தனர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

சட்டவிரோதமாக இலங்கையை விட்டு வெளியேறி இவர்கள் இத்தாலிக்குச் செல்ல முயன்றபோதுதான் இந்தச்சம்பவம் ஏற்பட்டது.

கடந்த மாதமும் இதுபோலவே படகு மூலம் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 250 இலங்கை மக்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+