ஜெ.வுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ப்ளஸ்-2 மாணவன்
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இருந்து இ-மெயில் மூலம் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் அனுப்பியது ப்ளஸ்-2 மாணவன்என்பது தெரிய வந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் கல்வி அமைச்சர் தம்பிதுரைக்கும் சமீபத்தில் இ-மெயில் மூலம்கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள நெட் இன் நெஸ்ட், வேப்பமூடு சந்திப்பில் உள்ள ராஜாஸ் வெப்வேர்ல்டு மற்றும் மற்றொரு கம்ப்யூட்டர் மையம் ஆகிய 3 மையங்களில் இருந்தும் தனித்தனியாக இந்த கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கொலை மிரட்டல் பற்றி ரகசிய போலீசாரும் தீவிர வீசாரணை நடத்தி வந்தார்கள். அவர்கள் 40க்கும் மேற்பட்டநபர்களைப் பிடித்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தார்கள்.
அந்த விசாரணையில் பாலு என்ற ப்ளஸ்-2 மாணவன் தான் இ-மெயில் அனுப்பினான் என்று தெரிய வந்தது. இவர்நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த பிரபல டாக்டரின் மகன் ஆவார்.
கொலை மிரட்டல் அனுப்பிய காரணம்:
ப்ளஸ்-2 படித்த பாலு மேற்கொண்டு டாக்டருக்கு படிக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய மதிப்பெண்ணை அவர்பெறவில்லை. அதனால் அவர் இம்ப்ரூவ்மெண்ட் எழுத முடிவு செய்து அதற்காக தீவிரமாகப் படித்து வந்தார்.மேலும் கம்ப்யூட்டர் மையத்திலும் கம்ப்யூட்டர் படிப்பும் படித்து வந்தார்.
அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் மாதவன் பிள்ளையுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும்சேர்ந்து ராஜாஸ் வெப் வேர்ல்டுக்கு அடிக்கடி சென்று வந்தனர்.
இந்நிலையில் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதுபவர்கள் குறிப்பிட்ட பாடத்தை மட்டும் எழுதக் கூடாது, அனைத்துபாடங்களையும் எழுத வேண்டும் என்று தம்பிதுரை அறிவித்து இருந்தது மாணவர் பாலுவை மிகவும் வருத்தியது.
எனவே பாலு தனது எதிர்ப்பை தெரிவிக்க நினைத்து, ஜெயலலிதாவுக்கும், தம்பிதுரைக்கும் கொலை மிரட்டல்அனுப்பியுள்ளார். தன்னை யாரும் பிடித்து விடக் கூடாது என்பதற்காக மாதவன் பிள்ளை பெயரில் கொலைமிரட்டல் அனுப்பியுள்ளார்.
இது குறித்து பாலுவிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை மிரட்டல் பின்னணியில் மேலும்சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள்.
அதில் ஒருவர் கேரளாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக தெரிகிறது. அவர் பாலுவுக்கு நெருங்கிய நண்பர் ஆவார்.இதைத் தொடர்ந்து அவரை பிடிக்க போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.
ஜெ.வுக்கு இன்னொரு இ-மெயில் மிரட்டல்:
இந்நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் அண்ணாமலைக்கு இ-மெயில் மூலம் கடந்த 29ம் தேதி ஒரு செய்திஅனுப்பப்ட்டது.
இதில் ஜெயலலிதா, தம்பித்துறை ஆகியோரை பிப்ரவரி 28ம் தேதிக்குள் கொலை செய்வோம், இப்படிக்குஏ.மோகன், தமிழ்நாடு, தமிழ் ஈழம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
கொலை மிரட்டல் விடுத்த மோகன் என்பவன் யார் என்பது குறித்தும் உண்மையிலேயே அவன் தமிழ் ஈழத்தைச்சேர்ந்தவனா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications