தென் தமிழகத்தில் கன மழை: நீரில் மூழ்கிய பயிர்கள்
சென்னை:
குமரிமுனைக்கும், மாலத்தீவுக்கும் இடையிலான கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த மண்டலம் நிலைகொண்டிருப்பதால் தென் தமிழ்நாட்டில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழையும், பலத்த காற்றும் வீசும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் தென் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், நாகப்பட்டனம் ஆகியமாவட்டங்கள்தான் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தப் பயிர்கள் அனைத்தும்தற்போது பாழாகி விட்டது. மொத்தம் 50,000 ஏக்கர் அளவுக்கு தாளடி பயிரும், லட்சக்கணக்கான ஏக்கர் அளவுக்குசம்பா பயிரும் போடப்பட்டிருந்தது.
அதேசமயம், இந்த கன மழை கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் சந்தோஷத்தைக்கொடுத்துள்ளது. அங்கு இப்போது பயிர்களுக்குத் தண்ணீர் தேவை உள்ள நேரம். எனவே இந்த கன மழையால்பயிர்களுக்குப் போதுமான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
ஆனால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளர்கள், சிவகாசியில் தீப்பெட்டி தயாரிப்பாளர்கள், செங்கல் சூளைஉரிமையாளர்கள் இந்த கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று உற்பத்திகளுமே கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில் சாலைகள் அனைத்தும் மழையில் அரிக்கப்பட்டு விட்டன. சாலைகளில் நடமாடுவதற்கே சிரமம்என்ற நிலையில் அனைத்து சாலைகளும் உள்ளன.
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது. அபாய அளவைத் தாண்டிதண்ணீர் கொட்டுவதால் அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்த மாவட்டங்கள் தவிர மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துவருகிறது. குறிப்பாக திருச்சியில் தொடர்ந்து 3 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. காவிரி ஆற்றில்வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதற்கிடையே, குமரிமுனைக்கும், மாலத்தீவுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த மண்டலம் நிலைகொண்டிருப்பதால் தென் தமிழ்நாடு மற்றும் தென் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை அல்லதுமிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications