சிவகாசியில் மழை வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ள நோட்டுக்கள்
சிவகாசி:
சிவகாசியில் பெய்த கன மழையால் தண்ணீர் வெள்ளமாக ஓடியபோது அதில் பல 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள்மிதந்து வந்து மக்களை ஆச்சரியப்படுத்தின.
சிவகாசியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் திடீர் ஓடைகள் பல ஏற்பட்டுள்ளன.வெள்ளமாக மழை நீர் ஓடிக் கொண்டிருக்கிறது.
தேவமார் தெரு பகுதியில் உள்ள ஓடையில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென 500 ரூபாய் நோட்டுக்கள் மிதந்துவந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நீரில் மிதந்து வந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்துக்கொண்டனர்.
ஆனால் அதைப் பார்த்தபோது அதில் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா என்பதற்குப் பதில் ராஜீவ் பீடி ஆப் இந்தியாஎன்று எழுதப்பட்டிருந்தது.
இதனால் அவை கள்ள நோட்டுக்கள் என்று தெரிய வந்தது. இருப்பினும் மழை நீரில் 500 ரூபாய் நோட்டுக்கள்மிதந்து வந்தது சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகாசி போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications