ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க திமுக மீண்டும் கோரிக்கை
சென்னை:
வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதால் ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தலைஒத்திவைக்க வேண்டும் என்று திமுக மீண்டும் தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தலைமைத் தேர்தல் கமிஷனர் ஜே.எம். லிங்டோவுக்கு ராஜ்யசபா திமுக எம்.பியான எஸ். விடுதலை விரும்பிஇன்று (செவ்வாய்க்கிழமை) எழுதிய கடிதத்தில் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அக்கடிதத்தில்கூறியிருப்பதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகு நாங்கள் அத்தொகுதியில் இதுகுறித்த ஒருகணக்கெடுப்பு நடத்தினோம்.
அப்போது நிலக்கோட்டை சட்டசபை தொகுதியைச் சேர்ந்த 40 வாக்காளர்களின் பெயர்கள் ஆண்டிப்பட்டி தொகுதிவாக்காளர் பட்டியலில் போலியாகச் சேர்க்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளோம்.
மேலும் புளியமம்கும்பை கிராமத்திலேயே வசிக்காத 50 பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர வாக்களிப்பதற்குத் தகுதியில்லாத 18 வயதுக்குக் கீழே உள்ள 9 பேரின் பெயரும் வாக்காளர்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பதை நாங்கள் 100 சதவீதம் உறுதியாகக் கூறுகிறோம்.
எனவே இத்தகைய குறைபாடுகளைக் களையும் வரை ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தலை நடத்தக் கூடாது.உடனே இந்த இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று விடுதலை விரும்பி அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications