வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு பன்னீர் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையால் நெற்பயிர்கள் நாசம் அடைந்துள்ளதால், நிவாரண உதவி கேட்டுமத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மழைகாரணமாக 12 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் விளைந்த நெற்பயிர்கள் வெள்ள நீரில்மூழ்கி விட்டன.

மழையினால் இறந்த 12 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.25,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000வழங்கப்படும் என்றும் நேற்று பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

முன்னதாக, சமீபத்தில் பெய்த மழையால் 5,000 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு விட்டதாகவும், முதல்வர்நேரில் வந்து பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுபற்றி நிருபர்கள் முதல்வரிடம் நேற்று (திங்கள்கிழமை) கேட்டதற்கு முதல்வர் கூறியதாவது:

இது தொடர்பாக தேசிய இடர்பாடு நிதியில் இருந்து நிதி உதவி வழங்கும்படி மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்களிடம், பாதிப்பு நிலவரங்களைப் பற்றி அறிக்கையளிக்கும்படிஉத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வந்தப்பின் எவ்வளவு தொகை மத்திய அரசிடம் கேட்கப்படும் என்பதுபின்னர் தெரிவிக்கப்படும்.

தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களின் விவசாயிகளின் மனம் நிறைவு தரும் வகையில் நிவாரணஉதவிகள் வழங்கப்படும் என்று பன்னீர் செல்வம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+