அரசு ஊழியர் சங்கங்களுடன் தமிழக அரசு இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
சென்னை:
பிப்ரவரி 7ம் தேதி அரசு ஊழியர் சங்கங்கள் நடத்த இருக்கும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வைப்பதற்காக,இன்று (செவ்வாய்க்கிழமை) அவர்களுடன் தமிழக அரசு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.
போனஸ் மற்றும் கருணைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி வரும் 7ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசு ஊழியர் சங்கங்களுடன் ஏற்கனவே தமிழக நிதித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முடிவுஎதுவும் எடுக்கப்படவில்லை.
இதனால் வரும் 7ம் தேதி (நாளை மறுநாள்) முதல் வேலைநிறுத்தம் உறுதி என்று அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர் சங்கங்கள் அறிவித்திருந்தன.
இந்நிலையில் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற வைப்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியாக இன்று மாலை 5மணிக்கு சென்னையில் அரசு ஊழியர் சங்கங்களுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
ப்ளஸ் 2 தேர்வில் சிக்கல்:
இதற்கிடையே மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதாகஅறிவித்துள்ளனர். இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தால் மார்ச் 4ம் தேதி நடக்க இருக்கும்ப்ளஸ் 2 தேர்வில் சிக்கல்கள் ஏற்படும் என்று தெரிகிறது.
ஏனெனில் தற்போது தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணி நடந்துவருகிறது. வேலை நிறுத்தம் தொடங்கி விட்டால் இந்த பணி கடுமையாக பாதிக்கப்படும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications