நெல்லை அருகே கோஷ்டி மோதலில் 4 பேர் படுகொலை
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே கோஷ்டி மோதல் காரணமாக நேற்று (திங்கள்கிழமை) ஒரு பெண் உள்பட 4 பேர்படுகொலை செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பட்டம் கிராமத்தைச் சேர்ந்த பண்டாரம் மற்றும் சந்தானம் ஆகிய 2 பேரும் ஆற்றில்மணல் அள்ளும் வேலை செய்து வந்தனர்.
நேற்று மாலை அவர்கள் வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு புதரில் மறைந்திருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று எழுந்து பண்டாரத்தையும்சந்தானத்தையும் தாக்கி, அரிவாளால் வெட்டியது.
இந்தப் பயங்கரத் தாக்குதலில் பண்டாரம் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சந்தானம் மருத்துவமனைக்குஎடுத்துச் செல்லப்படும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தைக் கேள்விப்பட்ட கீழப்பட்டம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கொதித்தெழுந்து, அருகிள்ள மற்றொருகிராமமான திருத்துவுக்குச் சென்று, அங்குள்ள 5 குடிசைகளை எரித்தனர்.
அப்போது ஒரு குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் உயிரோடு எரிந்து சாம்பலானார்.
சமீபத்தில் ஹிந்து நாடார் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவர் திருநெல்வேலி ஜங்ஷன் அருகே கொலைசெய்யப்பட்டதன் எதிரொலிதான் இந்தப் படுகொலைச் சம்பவங்கள் என்று கூறப்படுகிறது.
மக்கள் தமிழ் தேசம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் கடந்த வாரம் தாக்கப்பட்டு, 5 கார்கள் எரிக்கப்பட்டதற்கும்இந்தப் படுகொலைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
இதற்கிடையே திருநெல்வேலி அருகே உள்ள வண்ணாரப்பேட்டையில் தாமிரபருணி கரையோரமாக செல்வம்என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்ததாகக் கருதப்படும் மூர்த்தி என்பவரைப்போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications