காரமடை அருகே ஒரே குடும்பத்தின் 3 பேர் விஷமருந்தி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

காரமடை:

காரமடை அருகே கணவன், மனைவி மற்றும் மகள் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள தேனிவீரம்பாளையம் கிராமத்தில் நேற்று (திங்கள்கிழமை)இரவு இந்தச் சம்பவம் நடந்தது.

தன்னுடைய 2வது மனைவி மற்றும் 9 வயது நிரம்பிய அவர்களுடைய பெண் குழந்தை ஆகியோருக்கு விஷத்தைக்கொடுத்துக் குடிக்கச் செய்த அந்த நபர், பின்னர் தானும் விஷத்தைக் குடித்தார்.

இவர்கள் விஷம் குடிப்பதைக் கண்ட அந்த நபரின் முதல் மனைவியுடைய 2 குழந்தைகளும் பக்கத்து வீட்டினரிடம்சொல்ல, விஷம் குடித்த அந்த 3 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்தப் பெண் குழந்தையின் உயிர் பிரிந்தது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு அந்தத் தம்பதிகளும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

இவர்களின் தற்கொலைக்குக் காரணம் என்னவென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+