நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆனந்த விகடன் ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக "ஆனந்தவிகடன்" ஆசிரியர் பாலசுப்ரமணியம் மற்றும் "நெற்றிக்கண்"ஆசிரியர் மணி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
டான்சி தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை விமர்சிக்கும்வகையில் கட்டுரை எழுதியிருப்பதாக தமிழக அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ராஜஸ்தானில் இருந்து வெளியாகும் தைனிக் நவஜோதி, ஆனந்தவிகடன், நெற்றிக்கண் ஆகியபத்திரிக்கைகள் நீதித்துறையையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கு வகையில் கட்டுரைகள் எழுதியுள்ளனர் என்றுசந்திரன் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமிஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்கள்நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
இதன்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆனந்தவிகடன் பத்திரிக்கை ஆசிரியர் பாலசுப்ரமணியம்,நெற்றிக்கண் ஆசிரியர் மணி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இருவரும் பதில் மனுத் தாக்கல் செய்வதற்காக கால அவகாசம் கோரினர். இதனால் வழக்கு விசாரணையை 3வாரங்களுக்குத் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications