சென்னையில் வெளிநாட்டு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது
சென்னை:
வெளிநாட்டிலிருந்து எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களைக் கடத்திக் கொண்டு சென்னை வந்த 3 பேர் போலீசாரால்கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் வெளிநாட்டுப் பொருட்களை உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பதுப் பற்றி பூக்கடை போலீசாருக்குசமீபகாலமாக நிறைய புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இதனால் போலீசார் தனிப்படை அமைத்து வெளிநாட்டுப் பொருட்களைக் கடத்தியவர்களை பிடிக்கும் முயற்சியில்ஈடுபட்டனர். இந்த வெளிநாட்டுப் பொருட்கள் நடமாட்டம் வடசென்னையில் அதிகம் புழங்குவதாகவும்போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் போலீசார் வட சென்னையில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பேசின்பிரிட்ஜ் பகுதியில் முத்துசாமிபாலத்துக்கு அருகே போலீசார் ஒரு மாருதி வேனை சோதனை செய்தனர்.
அந்த மாருதி வேனில் வெளிநாட்டு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களான வீடியோ காமிராகள், செல்போன்கள், காலர்போன்கள் மற்றும் டிவிக்கள் ஆகியவை இருந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம்.
அந்த பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த வேனில் இருந்த முகமுது உசேன்,பாலகிருஷ்ணன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அவர்கள் வெளிநாட்டிலிருந்து இப்பொருட்களை கடத்தி வந்து சென்னை, டெல்லி, நாக்பூர் உட்பட இடங்களுக்குவிற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது.
வேனுடன் அந்தப் பொருட்களையும் போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications