கொல்கத்தா தாக்குதல்: துபாயில் இருந்த அன்சாரி கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கொல்கத்தாவில் அமெரிக்க மையத்தின் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்திய ஆப்தாப் அன்சாரி என்ற பர்ஹான்மாலிக் கைது செய்யப்பட்டுவிட்டான்.

Farhan Malikபாகிஸ்தான் அரசு வழங்கிய போலி பாஸ்போர்ட்டுடன் துபாய் சென்று அங்கேயே ஹோட்டல் நடத்தி வந்தான்இவன்.

இவனைக் கைது செய்ய இன்டர்போல் அமைப்பின் உதவியையும் இந்தியா நாடியது. இன்டர்போல் உலக அளவில்அன்சாரிக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்துத் தான் இவனைக் கைது செய்யத் தயாராக இருப்பதாக துபாய் போலீசார் இந்தியாவிடம்தெரிவித்தனர். உடனடியாக மூத்த சி.பி.ஐ. அதிகாரி துபாய் விரைந்தார். துபாய் போலீஸ் உதவியுடன் அவனைசி.பி.ஐ. அதிகாரி கைது செய்தார்.

பின்னர் அவனை இந்தியாவுக்குக் கொண்டு மேலும் சில சி.பி.ஐ. அதிகாரிகள் துபாய்க்கு விரைந்தனர்.அன்சாரியையும் ராஜிந்தையும் கைது செய்து இன்று மாலை 5 மணிக்கு டெல்லி கொண்டு வந்தனர் என சி.பி.ஐ.இயக்குனர் பி.சி.சர்மா கூறினார். அன்சாரிக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐக்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளதாகஇந்தியா ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவும் ஐக்கிய அரபு நாடுகளும் குற்றவாளிகளை ஒருவரிடம் ஒருவர்ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் இந்தியாவிடம்ஒப்படைக்கப்படும் முதல் குற்றவாளி அன்சாரி தான்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் தான் துபாயில் மறைந்து வாழ்ந்து வந்த மும்பை தாதா தாவூத் இப்ராகிம்பாகிஸ்தான் அரசின் உதவியுடன் கராச்சிக்குத் தப்பி வந்து அந் நாட்டு ராணுவப் பாதுகாப்பில் வசித்து வருகிறான்என்பது குறிப்பிடத்தக்கது.

அன்சாரிக்கும் தாவூத் இப்ராகிமுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. தாவூதைப் போல ஆட்கலைக் கடத்தி பணம்பறிப்பது இவன் தொழிலாக இருந்து வந்தது. ஆனால், இவனது அடியாளான ஆசிப் அலி என்பவனை குஜராத்போலீசார் சுட்டுக் கொன்றனர். இதற்கு பழி வாங்கவே கொல்கத்தாவில் போலீசாரைக் கொன்றதாக இவன்கூறியிருந்தான் என்பது நினைவுகூறத்தக்கது.

2000ம் ஆண்டில் இவனை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளைச்செய்ய தூண்டிவிட்டது. ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி என்ற அமைப்பின் தலைவனான ஒமர் ஷேக்கையும்இவனுக்கு ஐ.எஸ்.ஐ. அறிமுகம் செய்து வைத்தது.

இந்த ஒமர் ஷேக் காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டபோது போலீசாரிடம் பிடிபட்டான். இவனை காஷ்மீர்சிறையில் இந்தியா வைத்திருந்தது. அப்போது தான் இந்திய விமானத்தைக் கடத்திய பாகிஸ்தான் தாவிரவாதிகள்ஒமர் ஷேக் மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின் தலைவர் முகம்மத் அஸார் ஆகியோரை விடுவிக்கவைத்தனர்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு காண்டஹாரில் கொண்டு போய் விடப்பட்ட ஒமர் ஷேக் அங்கிருந்துபாகிஸ்தான் தப்பிச் சென்று அங்கு தான் வசித்து வருகிறான்.

இந்திய தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி அதன் மூலம் கோடிக்கணக்காக பணம் பறித்த இந்த துபாய் அன்சாரிஅந்தப் பணத்தில் 1 மில்லியன் டாலரை ஒமர் ஷேக்குக்குத் தந்தான். அந்தப் பணத்தை ஒமர் ஷேக் நியூயார்க்கில்விமானத் தாக்குதல் நடத்திய கும்பலின் தலைவன் முகம்மத் அட்டாவுக்கு அனுப்பி வைத்தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.

மேலும் 3 பேர் கைது:

இந் நிலையில் கொல்கத்தா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பேரையும், பங்களாதேஷ் நாட்டைச்சேர்ந்த ஒருவனும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 22ம் தேதி கொல்கத்தாவில் அமெரிக்க மையம் தாக்கப்பட்டது. இதில் 5 போலீசார் இறந்தனர்.இதனை நான் தான் திட்டமிட்டு நடத்தினோம் என ஆப்தாப் அன்சாரி துபாயில் இருந்தவண்ணம் கொல்கத்தாபோலீசாரை தொலைபேயில் அழைத்துக் கூறினான்.

இத் தாக்குதல் நடந்த சில நாட்களில் இதில் தொடர்புடைய 2 பேர் ஜார்கண்ட் மாநிலத்தில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந் நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானியர் 2 பேரையும், பங்களாதேஷை சேர்ந்த ஒருவனையும்போலீசார் டெல்லி ரயில் நிலையத்தில் இன்று கைது செய்தனர்.

இவர்கள் 3 பேரும் ரயில் மூலம் ஆக்ராவுக்கு செல்ல காத்திருக்கும்போது பிடிபட்டுள்ளனர். இவர்கள்பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர்.

கைதானவர்களைப் பற்றி தகவல் தெரிக்க போலீசார் மறுத்து விட்டனர். மேலும் இந்த 3 பேர்களுடன் தொடர்புடையமேலும் சிலரை போலீசார் பீகார், உத்தரப்பிரதேசத்தில் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்காளப் பிரதமர் புத்ததேவ் பட்டாச்சார்யா, உள்துறைச் செயலாளர் அத்வானியைடெல்லியில் இன்று சந்தித்தார்.

மேற்கு வங்காளத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கை நிலை குறித்து இருவரும் பேசியதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+