கிரையோஜெனிக் சோதனை வெற்றி: ஜனாதிபதி பாராட்டு
டெல்லி:
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாகச்சோதிக்கப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிரையோஜெனிக் எஞ்சின் தொழில்நுட்பத்தைத் தானும் தராமல் ரஷ்யாவையும் நமக்குத் தரவிடாமல் அமெரிக்காதடுத்து வந்தது. இதையடுத்து இந்திய விஞ்ஞானிகளே இதைப் பெரும் சவாலாக எடுத்துக் கொண்டுகிரையோஜெனிக் எஞ்சின் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் பலமுறை இந்த எஞ்சின் தயாரிப்பு தோல்வியடைந்து கொண்டே இருந்தது. கடந்த பல ஆண்டுகளாகஇஸ்ரோ விஞ்ஞானிகள் அரும்பாடுபட்டு கிரையோஜெனிக் எஞ்சினை வெற்றிகரமாகத் தயாரித்து விட்டனர்.
பின்னர் நேற்று மாலை இந்த கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாகச் சோதித்தும் பார்க்கப்பட்டது. இந்தவெற்றியின் மூலம் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் பெற்றுள்ள அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும்ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் 6வதாக இந்தியாவும் சேர்ந்துள்ளது.
இந்நிலையில் கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி நாராயணன் தன்னுடையபாராட்டுக்களை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்துள்ளார்.
கிரையோஜெனிக் எஞ்சினை வெற்றிகரமாகத் தயாரித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் நம் நாட்டையேபெருமைக்குள்ளாக்கி விட்டார்கள் என்று இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் நாராயணன் கூறியுள்ளார்.
இந்த கிரையோஜெனிக் சோதனையின் வெற்றிக்காக இந்திய விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும்கடுமையாக உழைத்துள்ளனர் என்றும் நாராயணன் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.
செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி. மற்றும் ஏ.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளைசொந்தமாகத் தயாரித்து வந்த இந்தியா, தற்போது அந்த ராக்கெட்டுகளை ஏவுவதற்குத் தேவையானகிரையோஜெனிக் எஞ்சின்களையும் சொந்தமாகத் தயாரிக்கும் திறனைப் பெற்று விட்டது.
இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் அமெரிக்காவின் விண்வெளித் தொழில்நுட்பத்தைவிட அதிகத் திறன்கொண்டிருப்பதாக சமீப காலமாகப் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications