பன்னீரை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை:
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குஇன்று (திங்கள்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த பிறகு, அப்பதவியைஆந்திர ஆளுநராக இருந்த டாக்டர் சி. ரங்கராஜன் கூடுதலாக வகித்து வந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னீர்செல்வத்துக்கு டாக்டர் ரங்கராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தின் தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்த ரங்கராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததால்பன்னீர்செல்வத்தின் முதல்வர் பதவி செல்லாது என்றும் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிஉயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த சரவண சதீஷ் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமிஆகியோர் அடங்கிய முதலாவது டிவிஷன் பெஞ்ச், அம்மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விளம்பர நோக்கத்திற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்கூறியிருந்தனர்.
மேலும், இதற்காக பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்ட செலவை ஈடுகட்டுவதற்காக அவருக்கு மனுதாரரான சரவணசதீஷ் ரூ.25,000 அபராதம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உத்தரவிட்டனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications