பழனிபாபா கொலை வழக்கு: 4 ஆயுள் கைதிகளுக்கு ஜாமீன்
சென்னை:
பழனிபாபா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 4 கைதிகளை சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில்விடுவித்தது.
பழனியைச் சேர்ந்த பழனிபாபா என்பவர் அகில இந்திய ஜிகாத் கமிட்டியின் தலைவர். இவர் கடந்த 1997ம் ஆண்டுஜனவரி மாதம் ஒரு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தனர். இந்த வழக்கைவிசாரித்த கோவை செஷன்ஸ் நீதிமன்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவரைவிடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கியது.
ஆயுள் தண்டனை பெற்ற இந்த 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஆயுள் தண்டனை பெற்றசுதாகரன், முரளி, திருஞானம், உதயன் ஆகிய 4 பேரும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களைத்தாக்கல் செய்தனர்.
தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கு முடியும் வரை ஜாமீனில்விட வேண்டும் அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் என்.தினகர், பாக்யராஜ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. பின்னர்அந்தக் கைதிகளை ரூ.10,000 சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு 2 நபர் ஜாமீனிலும் விடுதலை செய்யுமாறுநீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவர்கள் 4 பேரும் கடலூரில் தங்கியிருக்க வேண்டும் என்றும் கடலூர் புது டவுண் காவல் நிலையத்தில் தினமும்காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனைவிதித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications